Published : 22,Oct 2017 02:08 AM

திமுக ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்: ஓ.பன்னீர்செல்வம்

Peoples-Not-Allowed--DMK-Governance-Says-Deputy-CM-OPanneerselvam

திமுகவின் சர்வாதிகா‌ர ஆட்சியை மீண்டும் கொண்டுவர ஸ்டாலினை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அதிமுகவின் 46ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கட்சி தொடங்கியதிலிருந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி குறித்து பாராட்டி பேசினார். இதனை அடுத்து முல்லை பெரியாறு, காவிரி விவகாரம், இலங்கையில் நடந்த போர் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக எந்த விதத்திலும் செயல்படவில்லை என விமர்சித்தார். தேர்தல் ஆணைய விசாரணையின் முடிவில் இரட்டை இலையும், கட்சியும் தங்களுக்கே கிடைக்கும் எனவும் கூறினார். மேலும் உள்ளாட்சித் தேர்தல், சட்ட‌ப்பேரவை தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்