Published : 22,Oct 2017 01:59 AM

அதிமுக ஆட்சியில் தான் வளர்ச்சி ஏற்பட்டது: முதலமைச்சர் பழனிசாமி

Tamilnadu-CM-Edappadi-Palanisamy-Slams-DMK


தமிழக மக்களுக்கு தேவையான வளர்ச்சித்திட்டங்கள் அதிமுக ஆட்சிக்கா‌லத்தில் கொண்டுவரப்பட்டன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் ‌நடைபெற்ற அதிமுக 46ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அவர், விவசாயிகளின் நலனிற்காக பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றியது அதிமுக அரசு என பெருமிதத்துடன் கூறினார். ஒரே நேரத்தில் 20ஆயிரம் ஆசிரியர்களை நியமித்ததும், எந்ததுறைக்கும் இல்லாத அளவிற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கியதும் அதிமுக தலைமையிலான தமிழக அரசுதான் என்றும் தெரிவித்தார். மத்தியில் ஆட்சியில் இருந்த போதுகூட தமிழகத்திற்கு திமுக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார். 

இந்த ஆட்சி மீது குறைக்கூற ஏதும் இல்லை என்பதால் டெங்குவை திமுக கையில் எடுத்துள்ளதாகவும், ஆனால் டெங்குவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். மு.க.ஸ்டாலின் அவரது தந்தை கருணாநிதியின் பின்புலத்தில் அரசியலுக்கு வந்ததாகவும், அதே நேரம் தன்னை போல் அதிமுகவில் உள்ளவர்கள் அது போன்ற எந்த பின்புலமும் இன்றி அரசியலில் ஈடுபட்டு உயரமுடியும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். தமது அரசை குறைகூற திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்