[X] Close

ஒரே மாதத்தில் 3-ஆவது முறையாக குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

PM-Modi-visit-gujarat-today

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த மாதத்தில் அவர் மேற்கொள்ளும் 3-ஆவது பயணம் இதுவாகும்.

பாவ் நகர் மற்றும் வதோதரா ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதமர், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். குறிப்பாக கோகா- தாஹேஜ் ஆகிய நகரங்களுக்கு இடையே அரபிக்கடலில் 615 கோடி ரூபாய் செலவில் புதிய படகு சேவையை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம், அந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள 310 கிலோமீட்டர் சாலை வழிப்பயணம், கடல் மார்க்கத்தில் 30 கிலோமீட்டராக குறையும். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close