[X] Close

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு: ஆயுதத்தை தேடும் சிபிசிஐடி

Coimbatore-Sasikumar-Murder-Case


கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 


Advertisement

கடந்தாண்டு செப்டம்பர் 22ஆம் தேதி கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக இதுவரை, அபுதாஹிர், சதாம், சுபேர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் சசிகுமாரை கொன்றுவிட்டு ஆயுதங்களை உக்கடம் கழிவுநீர் பண்ணையில் வீசியெறிந்துச் சென்றதாக கூறியுள்ளனர். ஓரிரு நாட்களில், கொலைக்கான ஆயுதம் பறிமுதல் செய்யப்படும் என சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 


Advertisement

Advertisement
[X] Close