
ஆட்கடத்தல் போல் வாகனங்களை கடத்தி, அவற்றின் உரிமையாளர்களிடம் பேரம் பேசி பணம் பறிக்கும் சம்பவங்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நடைபெறுவது தெரியவந்துள்ளது.
வீடு மற்றும் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை ஒரு கும்பல் திருடி, அதன் உரிமையாளருக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட தொகையை கொள்ளையர்களிடம் கொடுத்துவிட்டு, இருசக்கர வாகனத்தை மீட்டு வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இந்த செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு பயந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, வாகனத் திருட்டு தொடர்பாக இருவரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விசாரணை தொடர்வதாகவும் அவர் கூறினார்.