Published : 21,Oct 2017 11:39 AM

ராகுல்காந்தி அரசியல் குளிர்காய்கிறார்: தமிழிசை எதிர்ப்பு

tamilisai-soundararajan-commented-for-mersal-issues

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அரசியலில் குளிர்காய்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

மெர்சல் விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “மிஸ்டர் மோடி திரைப்படம் என்பது தமிழ் மொழி, கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்பாடு. மெர்சலில் தலையிடுவதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்கச் செய்யாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழிசை செளந்தரராஜன் “ராகுல்காந்தி நடக்கும் பிரச்னையை வைத்து அரசியல் குளிர்காய்கிறார். கொத்துக் கொத்தாக இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராகுல் காந்தி என்ன செய்தார், அதுகுறித்து இவரின் கருத்து என்ன? என்று கேட்டிருக்கிறார். மேலும் மெர்சல் படப் பிரச்னை சுமூகமான முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்