பராசக்தி திரைப்படம் தற்போது வெளியானால் கோவில்களில் இருந்து அரசை மக்கள் வெளியேற்றுவார்கள் என பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மெர்சல் பட விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசின் கொள்கைகளை புகழும் விதமாகவே இனி படம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் வரலாம் என விமர்சித்திருந்தார். பராசக்தி படம் தற்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவுகளை எண்ணிப் பாருங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, பராசக்தி திரைப்படம் தற்போது வெளியானால் கோவில்களில் இருந்து அரசை மக்கள் வெளியேற்றுவார் என தெரிவித்துள்ளார். அவரின் பதிவில்," இன்று பராசக்தி படம் வெளியானால் கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரம் ஆகக்கூடாது என்று மக்கள் அரசை கோவிலிலிருந்து வெளியேற்றுவர்" என குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide