Published : 21,Oct 2017 08:06 AM

தமிழின் பெருமையை மதிப்பிழக்கச் செய்யாதீர்கள்: மெர்சலுக்கு ஆதரவாக ராகுல்காந்தி கருத்து

Rahul-gandhi-supports-Vijay-Mersal-Movie

மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்கச் செய்யாதீர்கள் என பிரதமர் மோடியை ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து தீபாவளியன்று வெளியான படம் மெர்சல். படம் வெளியாவதற்கு முன்பே படத் தலைப்பு உள்ளிட்ட சர்ச்சை எழுந்த நிலையில் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டு படம் வெளியானது. ஆனால் படம் வெளியான பின்பும் கூட, மெர்சலின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

மெர்சல் திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி பற்றி நடிகர் விஜய் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். மெடிசனுக்கு 12 சதவீதம் வரி. ஆனால் தாய்மார்களின் தாலியை அறுக்கிற சாராயத்திற்கு ஜிஎஸ்டி இல்லை எனும் வசனம் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழக பாஜக இதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. பாஜகவின் எதிர்ப்பைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. 
இந்த நிலையில், மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் நேரடியாக பிரதமர் மோடியை சாடியுள்ளார். "மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் மொழி, கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்பாடு. மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்கச் செய்யாதீர்கள்" என ராகுல்காந்தி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்