Published : 21,Oct 2017 05:36 AM
கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை

சென்னை கோட்டை கொத்தளத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை இருந்ததால் இறக்கப்பட்டது.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், மிகப்பெரிய கொடிக்கம்பம் உள்ளது. பொதுவாக தினந்தோறும் காலையில் ஏற்றப்படும் கொடியானது மாலையில்தான் அங்குள்ள ராணுவ வீரர்களால் இறக்கப்படும்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் கொடி ஏற்றப்பட்டது. ஆனால் கொடியில் ஓட்டை இருப்பது குறித்து தெரியவந்ததால், அதிகாரிகள் கவனத்திற்கு இந்த விஷயம் கொண்டுச் செல்லப்பட்டது. இதனையடுத்து பிற்பகலில் தேசியகொடி இறக்கப்பட்டு பின்னர் புதிய கொடியுடன் கம்பத்தில் ஏற்றப்பட்டது.