[X] Close

பாதுகாப்பு படையினருக்கு பனிச்சறுக்கு ஸ்கூட்டர்..!

ITBP-jawans-get-snow-scooters-for-border-patrol

இந்திய சீன எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு பனிச்சறுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற சுற்றுலா பகுதிகளில் சாகச விளையாட்டுக்காக பனிச்சறுக்கு ஸ்கூட்டர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் முதல் முறையாக எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்த ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பனிச்சறுக்கு ஸ்கூட்டர்கள் ரூ 1 கோடி செலவில் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டதாக ராணுவ அதிகாரி விவேக் கே பாண்டே கூறியுள்ளார். இதன் இருக்கைகள் 45 டிகிரி சாய்வு பெற்றும், சைனிஸ் பெல்ட்கள் பொருத்தியும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேர் அமர்ந்து செல்லலாம்.  278 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டர் பனி மூடியுள்ள பகுதிகளில் கூட அசாதாரணமாக சறுக்கி செல்லும். 


Advertisement

இந்தியாவை ஒட்டி 3,488 கி.மீ தூரத்துக்கு சீன எல்லை உள்ளது. பனிச்சறுக்கு ஸ்கூட்டர் மூலம் ரோந்து பணியை சிறப்பாக செயல்படுத்த முடியும் என எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

சீன ராணுவ நடமாட்டத்தை இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது இந்த எல்லை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 5 பனிச்சறுக்கு ஸ்கூட்டர்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close