Published : 20,Oct 2017 03:31 PM

டெங்கு காய்ச்சலால் 9ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

school-girl-dead-from-dengue-fever-in-thirunelveli

நெல்லை மாவட்டம் பணகுடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்த விவசாயி சிவலிங்கத்தின் மகள் சத்யாவுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு அவருக்கு காய்ச்சல் குணமாகாததால் கன்னியாகுமரி மாவட்டம் வெள்‌மடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு சத்யாவுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரளாவிலுள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சத்யா உயிரிழந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்