கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திரசிங் தோனி அறிவித்தால், அவரது வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராகக் கருதப்படும் மகேந்திரசிங் தோனி, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். அதேநேரம் ஒரு வீரராக இந்திய அணிக்காக விளையாட தோனி முடிவு செய்துள்ளார். தோனியின் இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தோனியின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், கேப்டன் பதவியிலிருந்து தோனி ஓய்வுபெற்று விட்டாலும், ஒரு வீரராக இந்திய அணியில் அவர் தொடர வேண்டும். ஒருசில ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய அபாயகரமான பேட்ஸ்மேனான தோனியின் சேவை இந்திய அணிக்கு தேவை. ஒருவேளை அவர் ஓய்வுபெறுவதாக அறிவித்தால், கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பங்கேற்கக் கோரி அவர் வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடும் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!