Published : 20,Oct 2017 12:05 PM

‘மெர்சல்’ காட்சிகளை நீக்க தேவையில்லை : பா.ரஞ்சித்

There-is-no-need-to-remove-scenes-from-mersal-movie-Director-Pa-Ranjith

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மக்களுடைய கருத்தைதான் பிரதிபலிக்கிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளையும், தடைகளையும் மீறி தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. வெளியாவதற்கு முன்பு பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்த மெர்சல் திரைப்படம், வெளியான பின்பும் புதிய எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தியாவுடன் சிங்கப்பூரை ஒப்பிடும் காட்சிகள், ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை தொடர்பான காட்சிகளுக்கு தமிழக பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச்.ராஜா உள்ளுட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் திரையுலகை சேர்ந்த பலரும் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மக்களுடைய கருத்தை தான் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், மெர்சல் படத்தில் வரும் காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்றும் படத்தில் உள்ள ஜிஎஸ்டி வரி குறித்த காட்சிகளை நீக்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்