[X] Close

மெர்சலை மாபெரும் வெற்றி படமாக்கியதற்கு நடிகர் விஜய் நன்றி..!

Actor-Vijay-said-Thank-you-for-making-Mersal-a-Great-success

மெர்சல் திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்த அனைவருக்கும் உள்ளம்கனிந்த நன்றி என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம் முதல் நாளில் மட்டும் 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 3,292 திரையரங்குகளிலும், தமிழகத்தில் 750-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் மெர்சல் திரைப்படம் வெளியானது. 

படத்தின் தலைப்பு, விலங்குகள் நல வாரியத்தின் தணிக்கை, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் போன்ற கருத்துக்களால் பாஜகவின் எதிர்ப்பு, பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களில் கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு ஆகிய பல்வேறு தடைகளையும் தாண்டி விஜயின் மெர்சல் படம் வசூலை குவித்து வருகின்றது.


Advertisement

இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கியதற்கு நன்றி தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் படம் வெற்றி படமானது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close