
மயிலாடுதுறை அருகே சொத்து பிரச்னை காரணமாக ஏற்பட்ட அடிதடி தகராறில் கீழே விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பெருஞ்சேரியை சேர்ந்தவர் ரவி. இவருக்கும், இவரது அண்ணன் பாஸ்கருக்கும் சொத்து பிரச்னை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் சொத்து தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த ரவி மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு, விசாரணை மேற்கொண்டுள்ளனர். அண்ணன், தம்பியிடையே ஏற்பட்ட சொத்துத் தகராறில், தம்பி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.