[X] Close

செஞ்சியில் ஒரு சேகுவேரா: அரசியல் பேசும் படம்!

-venkatsubramani--hero-speaks-about-his-film

சுதேசி வுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம், ’வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3’. இதை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் ரோஷன். இயக்குநர் ஹரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, ஜெ. ஸ்ரீதர். வசனம், பி. வெங்கட சுந்தரம்.  ஹர்ஷிதா பன்வர் நாயகியாக நடிக்கிறார். ’நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கருணாஸ், வம்சி கிருஷ்ணா, யார் கண்ணன், மாரிமுத்து உட்பட பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி நாயகன் ரோஷன் கூறும்போது, ‘ பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து, பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் எங்கள் படத்தை பார்த்தால், பொய் பேசமாட்டார்கள். அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். இந்தப் படத்தை பார்த்த பிறகு அவர்கள் பொய் சொல்ல தயங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தில் புரட்சிகரமான கருத்து உள்ளது. இந்த படமே ஒரு புரட்சிகரமான படம்தான். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும்? அது தான் எங்கள் படத்தின் கதை களம். படத்தில் மோடி முதல், சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம். படத்துக்காக நான் 250 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ளேன். இப்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது’ என்றார். 


Advertisement

Advertisement
[X] Close