’கோலிசோடா 2’ வில் கவுதம் வாசுதேவ் மேனன்

’கோலிசோடா 2’ வில் கவுதம் வாசுதேவ் மேனன்
’கோலிசோடா 2’ வில் கவுதம் வாசுதேவ் மேனன்

விஜய்மில்டன் இயக்கிய ’கோலி சோடா’ படத்தின் அடுத்த பாகம் 'கோலி சோடா-2’ என்ற பெயரில் இப்போது உருவாகி வருகிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர்,  பரத் சீனி, வினோத், பரத், சுபிக்ஷா, கிரிஷா, ரக்ஷிதா, ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். 

இதுபற்றி விஜய் மில்டன் கூறும்போது, 'இந்த கதையை எழுதும்போதே இந்த கேரக்டரில் கவுதம் வாசுதேவ மேனன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். இது கெஸ்ட் ரோலாக இருந்தாலும் கதையை நகர்த்தும் கேரக்டர். கதையை கேட்ட கவுதம் நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது இயல்புக்கும்  குணாதிசயங்களுக்கும் ஒத்துப்போகும் கேரக்டர் என்பதால்தான் அவரை நடிக்க வைத்திருக்கிறேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது நடந்துவருகிறது’ என்றார்.  

சமீபத்தில் வெளியான 'கோலி சோடா 2' படத்தின் டீஸருக்கு கவுதம் வாசுதேவ மேனன்தான், வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com