[X] Close

சேவாக்குக்கு இன்று பர்த் டே: பிரபலங்கள் வாழ்த்து!

Virender-Sehwag---s-birthday-today

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஓபனிங் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். அதிரடி ஆட்டக்காரரான இவர் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். பந்துகளை சிக்சருக்கும் பவுண்டருக்கும் பறக்கவிடுவதில் வல்லவரான அவருக்கு இன்று 39 வது பிறந்த நாள். இதையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல், முகமது ஷமி உட்பட ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேவாக், ஒரு நாள் போட்டிகளில் 8273 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 219 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்கள் எடுத்துள்ளார். 
 


Advertisement

Advertisement
[X] Close