[X] Close

கால்வாய் உடைந்து வெள்ளம்: நீரில் மூழ்கிய கிராமங்கள்

Salem-canal-broken

சேலத்தில் கால்வாய் உடைந்து ஊருக்குள்‌ தண்ணீர் புகுந்ததில் விளைநிலங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கின.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தக்காளி காடு என்ற ‌இடத்தில் கால்வாய் ஒன்று உடைந்தது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் அருகில் விளைநிலங்களில் பாய்ந்தது. இதில் மஞ்சள், கரும்பு, ராகி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. அத்துடன் தக்காளி காடு, செட்டியப்பனூர் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் ஊரைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருக வாய்ப்புள்ளதாகவும், காய்ச்சல் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close