Published : 13,Feb 2017 02:20 AM

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது திமுக உயர்நி‌லை செயல்திட்டக் குழு

High-executive-committee-meeting-of-the-DMK-political-conditions-created-exciting----

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். இதில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவின் காரணமாக அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதாக குற்றம்சாட்டி‌யுள்ள ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்