Published : 13,Feb 2017 01:53 AM
அதிமுக தரப்பில் சைபர்கிரைம் பிரிவில் புகார்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சார்பில் சைபர்கிரைம் பிரிவில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் சசிகலா, ஆளுநருக்கு கடிதம் எழுதியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.