Published : 18,Oct 2017 04:46 PM

குழந்தை கடத்தலில் மேலும் ஒரு பெண் கைது: காவல்துறை தொடர் விசாரணை

3-arrested-for-kidnap-child-in-srivillipputtur

ஸ்ரீவில்லிபுத்தூரில் 3வயது குழந்தையை கடத்தி விற்க முயன்ற சம்பவத்தில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டடன்பட்டி தெருவில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவரின் குழந்தை கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த குழந்தையை மீட்ட காவல்துறையினர் இரண்டு பெண்களை கைது செய்தனர். வீட்டின் உரிமையாளர் மகாலட்சுமி என்பவர் குழந்தையை கடந்தி விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் குழந்தைகடத்தலில் தொடர்புடைய சங்கரன்கோவிலை சேர்ந்த நூர்ஜஹான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்