டெங்கு மற்றும் காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழப்பு

டெங்கு மற்றும் காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழப்பு
டெங்கு மற்றும் காய்ச்சலால் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக இன்று 5 பேர் உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம் சின்னமல்லிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணி என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தருமபுரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சங்கீதபிரியா என்ற 3 மாத கர்ப்பிணியும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். இது தவிர திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெயராம், மதுரையை சேர்ந்த ஆர்த்திகா, தஞ்சையை சேர்ந்த சிறுமி பவித்ரா ஆகியோர் காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். டெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com