ஸ்கூட்டரில் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிகள்

ஸ்கூட்டரில் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிகள்
ஸ்கூட்டரில் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிகள்

சீனாவில் உணவு டெலிவரி செய்யும் நபர் பைக் ஓட்டியபடியே தனது காதல் மனைவியை கரம் பிடித்துள்ள வீடியோ அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. 

தற்போது நடைபெறும் திருமண விழாக்கள் புதுமையான முறையில் நடைபெறுவது வழக்கமாக மாறி வருகிறது. சீனாவில் ஒரு ஜோடியின் திருமணம் வாகனத்திலேயே நடைபெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. சீனாவின் ஹோட்டல் ஒன்றில் டெலிவரி நபராக வேலை செய்யும் ஒரு இளைஞர், ரோட்டில் வாகனம் ஓட்டியபடியே தனது காதல் மனைவியை மணந்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் திருமண தம்பதினர் இருவரும் ஒரு பைக்கில் முன்னால் செல்கின்றனர். அவர்களுக்கு பின்னால் மணமகனுடன் பணியாற்றும் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் அவர்களை வாழ்த்தியபடியே இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக செல்கின்றனர்.பின்பு அந்த இளைஞர் அந்த வாகனத்திலேயே தனது காதல் மனைவிக்கு மோதிரம் அணிவித்து அவரை மணந்துக் கொள்கிறார். பின்பு இருவரும் மீண்டும் அதே பைக்கில் செல்கின்றனர். 

புதுமையான முறையில் சீனாவில் நடைபெற்ற இந்த திருமணம் அனைவரையும் கவர்ந்துள்ளது. மணமக்கள் சென்ற பைக் அவர்கள் அணிந்திருந்த ஆடையின் நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்தது கூடுதல் சிறப்பு. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com