இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நியூலாந்து அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடருக்கு பயிற்சி பெறும் வகையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் 2 பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து விளையாடுகிறது. இந்நிலையில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அணி, லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, கருண் நாயர் ஆகியோரின் அரைசதங்களால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 265 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் முதல் பயிற்சி ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளது.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix