[X] Close

பட்டாசு மார்க்கெட்டில் தீ விபத்து: ஒருவர் பலி

Odisha-crackers-market-fire

ஒடிஷாவில் உள்ள பட்டாசு மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஓடிஷா மாநிலம் ரூர்கேலா பகுதியில் தீபாவளியையொட்டி பட்டாசு மார்க்கெட் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில், பட்டாசு மார்க்கெட்டில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடைகளும் கொழுந்துவிட்டு எரிந்தன. அப்போது வெடிமருந்துகள் வெடித்து சிதறியதால், தீ வீரியத்துடன் எரியத்தொடங்கியது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளும் வீணாகியுள்ளன. இந்த விபத்துக்கு மின்சாரக் கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close