[X] Close

புதுச்சேரியில் பேருந்து கட்டணங்கள் உயர்வு

Bus-fare-hiked-in-Puducherry

புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Advertisement

அதன்படி நகரப் பேருந்துகளில் ஆரம்ப நிலைக் கட்டணம் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 7 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்துகளில் கிலோமீட்டர் ஒன்றுக்கு 50 காசுகளாக இருந்த கட்டணம் 90 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சாதாரண பேருந்துகளில் 5 ரூபாயாக உள்ள ஆரம்ப நிலைக் கட்டணம் 8 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின்னர், தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close