மதுரையில் ஐந்து மாதத்திற்கு முன்பு காணாமல் போன குழந்தை மீட்கப்பட்டதோடு, குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கல்மேடு பகுதியில் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த வானவராயன், சிவகாமி தம்பதியின் மூன்றரை வயது பெண் குழந்தையான பவித்ரா கடந்த 5 மாதங்களுக்கு முன் காணால் போனார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குழந்தையைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை குழந்தையை கடத்திய பரமன், மீனா உள்ளிட்ட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், தென்காசியிலுள்ள ராமர் என்பவரிடம் குழந்தையை ஒரு லட்சத்து 20,000 ரூபாய்க்கு விற்றதாக தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து தென்காசி விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 5 மாதத்திற்கு பின் குழந்தையை கண்ட பெற்றோர், அன்போடு அரவணைத்ததோடு, கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!