[X] Close

அதிமுகவிற்கு மூடு விழா கொண்டாட வேண்டும்: சீமான் சீற்றம்

r-k-nagar-reelection-seeman-candidate-announcement

அதிமுகவிற்கு மூடு விழாவைதான் முதலில் கொண்டாட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக 46 ஆண்டு விழா கொண்டாடி வருவதை
பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவிற்கு மூடு விழாவைதான் முதலில் கொண்டாட வேண்டும். வேறு எந்த விழாக்களும் தேவையில்லை. அரசு
பணத்தில் மாவட்டம் தோறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறார்கள். இதனால் என்ன பயன்? எம்.ஜி.ஆர் நினைவாக ஒருமுறை
கொண்டாடினால் போதாதா? என்றவர் ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலின் போது ஓட்டுக்காக 4 ஆயிரம் ரூபாய் ஒரு கட்சி கொடுத்ததாகவும் மற்றொரு கட்சி 2
ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் அதை பல தாய்மார்கள் தன்னிடமே தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் விரைவில் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர்
தொகுதி இடைதேர்தலில் தமது கட்சியின் சார்பில் வேட்பாளராக கலைக்கோட்டுதயமே மறுபடி நிற்பார் எனவும் அறிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close