மீண்டும் மோதும் நடிகர் விஜய், சரத்குமார்!

மீண்டும் மோதும் நடிகர் விஜய், சரத்குமார்!
மீண்டும் மோதும் நடிகர் விஜய், சரத்குமார்!

12 வடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் சரத்குமாரின் படங்கள் ஒன்றாக தீபாவளியன்று ரிலீசாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சரத்குமார். முன்னால் நடிகர் சங்க தலைவர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் என்று சினிமா, அரசியல் இரண்டிலுமே வெற்றிகளை குவித்தவர். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘சென்னையில் ஒரு நாள்’ இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் 2 வது பாகமும் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இதே தீபாவளி தினந்தன்று நடிகர் விஜய் நடிப்பில் சமந்தா, நித்யா மேனன், வடிவேலு என நட்சத்திர பட்டாளமே இணைந்திருக்கும் ‘மெர்சல்’ திரைப்படமும் பல தடைகளை தாண்டி வெளிவர உள்ளது. இதே போல் கடந்த 2005 ஆம் ஆண்டு விஜயின் ’திருப்பாச்சி’ திரைப்படமும், சரத்குமாரின் ‘ஐயா’ திரைப்படமும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாகியது. அதன் பிறகு சுமார் 12 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com