ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 46வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ் திரைப்பட உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருந்த எம்ஜிஆர் 1953 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில், அறிஞர் அண்ணாவுடன் இணைந்து அரசியல் களத்திலும், தனது திரைப்படங்களிலும் திமுகவின் வளர்ச்சியில் பங்களித்தார் எம்ஜிஆர். 1967 ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்படக் காரணமானவர்களில் எம்ஜிஆருக்கு முக்கிய பங்கு உண்டு.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்ற நிலையில், 1972 ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எம்ஜிஆர். அதே ஆண்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுக வெற்றி பெற்றது. 1974 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்ற அதிமுக, தமிழகத்தில் பெரும் கட்சியாக உருவெடுத்தது. 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளை வென்ற அதிமுக, சட்டப்பேரவையில் 144 தொகுதிகளை வென்று முதல்முறையாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு, 1987 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அதிமுக, 1987 ஆண்டு எம்ஜிஆர் அந்த ஆண்டில் மறைந்தபோது இரண்டாக பிரிந்தது.
ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகிய அணிகளாக 1989ல் தேர்தலை சந்தித்த அதிமுக தோல்வி கண்டது. பிறகு ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஒன்றிணைந்த அக்கட்சி 1991ல் ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு ஜெயலலிதா தலைமையில் 2001, 2011, 2016 தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. இப்போதும் ஆளும் கட்சியாக அதிமுக உள்ள நிலையில், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இரட்டை விரலைக் காட்டி ஓட்டுக்களை அள்ளக் காரணமான அக்கட்சியின் இரட்டை இலை சின்னமும், கட்சியின் பெயரும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி