[X] Close

கூவத்தூரில் எம்எல்ஏ-க்களுடன் சசிகலா 2-ஆவது நாளாக ஆலோசனை

Sasikala-discuss-with-MLAs-in-Kuvathur

கூவத்தூர் விடுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ-க்களுடன் இரண்டாவது நாளாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கும் இடையே உச்சகட்ட மோதல் நிலவி வருகிறது. சசிகலா தரப்பு அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க கைப்பட்டுள்ளனர். இவர்களுடன் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக கூவத்தூரில் உள்ள அதிமுக எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்எல்ஏ-க்கள் அன்புடன் பேசி வருவதாகவும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது கூவத்தூரில் உள்ள எம்எல்ஏ-க்களுடன் சசிகலா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close