Published : 17,Oct 2017 05:00 AM

போலி வாக்காளர்களை நீக்க திமுக கோரிக்கை

Tamilnadu-Voters-List-Opposition-Party-Petition

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஆர்.எஸ். பாரதி எழுதியுள்ள கடிதத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இதில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, ஒருவரின் பெயரே இரு முறையும், ஒருவருக்கே பல இடங்களிலும் பெயர் சேர்க்கப்படுவதாக கூறியுள்ளார். இவற்றையெல்லாம் நீக்கி நூறு சதவிகிதம் முழுமையான பட்டியல் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். இறந்தவர்களின் பெயர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்களை நீக்கியும், போலி வாக்காளர் இல்லாத இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி கேட்டு கொண்டுள்ளார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்