[X] Close

ஸ்லீப்பர் செல்கள் என யாரும் இல்லை: ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.

No-one-called-sleeper-cells-in-ADMK-says-EPS-support-MLA-Sanmuganathan

ஸ்லீப்பர் செல்கள் என யாரும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகநாதன் கூறினார். தூத்துக்குடியில் அரசு பணிமனை ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகளை வழங்கி பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.


Advertisement

தூத்துக்குடி அரசுப் பணிமனை அண்ணா தொழிற்சங்க ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தீபாவளி பரிசு மற்றும் இனிப்புகளை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகநாதன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஸ்லீப்பர் செல்கள் எல்லா இடத்திலும் உள்ளதாக தெரிவித்த அவர், அதிமுக தொண்டர்களில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் இல்லை என்றார். டிடிவி தினகரனிடம் பணம் மற்றும் பதிவி பெற்றவர்கள் தான் ஸ்லீப்பர் செல்களாக உள்ளதாகவும், ஆட்சியில் இருப்பவர்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளதாக தினகரன் தெரிவித்து வருகிறார். அப்படி இருந்தாலும் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வருவதாக தெரிவித்தார்.


Advertisement

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் தான் ஸ்லீப்பர் செல்களை துவங்கியதாக தெரிவித்த அவர் ஸ்லீப்பர் செல்களில் இங்குள்ளவர்களும், அங்குள்ளவர்களும் இருப்பதாகவும் தினகரனால் பலன் அடைந்தவர்கள் ஸ்லீப்பர் செல்களாக உள்ளதாக தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close