[X] Close

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

chance-for-rain-in-tamilnadu-and-puducherry

மத்திய வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர், " மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் அநேக நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்" என தெரிவித்தார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close