Published : 12,Feb 2017 10:01 AM
அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை (வீடியோ)

திருவண்ணாமலையின் அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் கனகராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இருசக்கரவாகனத்தில் அவரும் அவரது நண்பரும் சென்று கொண்டிருந்த போது காரில் பின்தொடர்ந்து வந்த நபர்கள் அவர்களை இடித்து கீழே தள்ளிவிட்டனர். இதைத்தொடர்ந்து, காரில் இருந்து இறங்கி வந்த 3 பேர் கனகராஜை வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அந்த மூவரும் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் சரணடைந்தனர். கோயில் அருகே காலை நேரத்தில் நடந்த இந்த கொலைக்கான காரணம் குறித்து காவலதுறையினர் விசாரித்து வருகின்றனர்.