[X] Close

ஆளுநர் எப்படி செயல்பட வேண்டும்...? கோபாலகிருஷ்ண காந்தி கருத்து

gopala-krishna-gandhi-said-How-to-serve-as-Governor

தமிழகத்தில் தற்போது அரசியல் சிக்கல் நிலவும் நிலையில் இது போன்ற சமயங்களில் ஆளுநர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என வரையறுக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை என கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.


Advertisement

தமிழகத்தில் தற்போதுள்ள சூழல் முன் எப்போதும் இல்லாது என்றும் சிக்கலானது என்றும் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்தார். இது போன்ற சமயங்களில் ஆளுநர் முடிவெடுப்பதற்கு கால வரம்பு எதுவும் இல்லை என்றாலும் அவர் தன் நம்பகத்தன்மையை காப்பது அவசியம் என்பதை கோபாலகிருஷ்ண காந்தி விளக்கியுள்ளார்.

இந்த சமயத்தில் ஆளுநர் மிகச்சிறந்த அதே சமயம் நடுநிலையான சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் சுயமாக முடிவு எடுக்கவேண்டும் என்றும் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார். அவர் எடுக்க கூடிய முடிவு அரசியல் சாசனத்துக்குட்பட்டதாகவும் சட்ட ரீதியாக குறைசொல்ல முடியாததாகவும் இருக்க வேண்டும் என கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்தார். மேற்கு வங்க முன்னாள் ஆளுநரான கோபாலகிருஷ்ணகாந்தி, மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close