தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக நாள்தோறும் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும் நாள்தோறும் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று குமரி மாவட்டம் தக்கலை அருகே சாரோடு பகுதியைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி மகரிஷா டெங்குவால் உயிரிழந்தார். அதேபோல, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் 31 வயது பெண் மைதிலி உயிரிழந்தார். திருச்செங்கோடு அடுத்த அணிமூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்திலும் டெங்குவால் உயிரிழந்தார். மேலும், புதுக்கோட்டை இரணிவயலைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை ஜெயராணி என்பவரும் டெங்குவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதவிர, சேலம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் 11 மாத ஆண் குழந்தை மகித் காய்ச்சலால் உயிரிழந்தான். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த 25 வயது பெண் கார்த்திகாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை சாதனாவும் காய்ச்சலால் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பிரமிளாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
Loading More post
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!