அரசு மீது வைக்கப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் கூறி காலத்தை வீணடிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். மேலும், டெங்குவை ஒழிக்க பொதுமக்களும் போதிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 619 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். மேலும், இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மக்களவை துனைத் தலைவர் தம்பிதுரை, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக கருதி கலைத்துறையினர் சிலர் அரசியலுக்கு வர முயல்வதாகவும், அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!