நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா பெயர் மீண்டும் இடம் பெறவில்லை. அதே போல உமேஷ் யாதவ், முகமது ஷமி, கே.எல்.ராகுல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 22 ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இலங்கை தொடரில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் தாகூருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. சமீபத்தில் நடந்த யோ யோ உடல் தகுதி தேர்விலும் தான் பாஸ் ஆகிவிட்டதாக அஸ்வின் கூறியிருந்தார். இருந்தும் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
’இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ’சைனாமேன்’ குல்தீப், சாஹல் சிறப்பாக பந்துவீசினர். அடுத்த உலகக் கோப்பையை கவனத்தில் கொண்டு வீரர்களை தயார்படுத்த வேண்டியிருக்கிறது. அதனால், ஜடேஜாவும் அஸ்வினும் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்