[X] Close

போட்டியை மக்கள் மைதானத்திற்கு வந்து காண வேண்டும்: மித்தாலி ராஜ் கோரிக்கை

mithali-raj-indian-cricketer

விளையாட்டு போட்டிகளை மக்கள் மைதானத்திற்கு வந்து காண வேண்டும் என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் குழந்தைகள் விளையாட்டில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு தொலைக்காட்சிகள் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. அந்த நிலைமை மாற வேண்டும். தொலைக்காட்சிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை அதிகமாக ஒளிபரப்ப வேண்டும். அப்போதுதான் மக்களிடம் ஆர்வம் அதிகரிக்கும். அது டி-20 போட்டியாக இருந்தாலும் சரி. ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி. உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு எங்கள் அணி தயாராக உள்ளது. 
போட்டிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் விளம்பரத்தை அதிகப்படுத்த வேண்டும். மக்கள், போட்டிகளை மைதானத்துக்கு வந்து பார்க்க வேண்டும். ஆனால் அது நடப்பதில்லை என்று அவர் தெரிவித்தார். 


Advertisement

Advertisement
[X] Close