[X] Close

தொடரும் காய்ச்சல் மரணங்கள்: இன்று இதுவரை 9 பேர் மரணம்

today-dengue-dead-became-9-in-tamilnadu

தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று ஒரேநாளில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

தஞ்சை ஒரத்தூர் அருகே செம்பியன்கிளரியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் காய்ச்சல் காரணமாக இன்று காலை உயிரிழந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக 9 வயது சிறுவன் கபிலன் உயிரிழந்தான். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே காயத்ரி என்ற கல்லூரி மாணவி வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல உசிலம்பட்டியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் கபிலன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று உயிரிழந்தான்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லியம்பாளையத்தில் 11 ஆம் வகுப்பு மாணவன் ஹரினிஷ் காய்ச்சலால் உயிரிழந்தான். சேலம் ஆலமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் நந்தகுமார், காய்ச்சல் காரணமாக உயிரிழந்தான். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 5 வயது பைரவி என்ற சிறுமியும் காய்ச்சலால் உயிரிழந்தாள்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close