[X] Close

சென்னையின் சட்டம் ஒழுங்கு சூழல்: ஆணையர் ஜார்ஜ் அறிக்கை கேட்பு

police-commissioner-george

சென்னையின் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் ஆய்வாளர்களுக்கு ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

இதுகுறித்து காலை 9 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் சென்னையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிப்பது பற்றி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போராட்டம் நடைபெறக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது

முன்னதாக, சென்னையில் சமூக விரோத சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை சார்பில் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டுவதாக வந்த புகார்களை அடுத்து மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் பாதுகாப்பை உறுதி செய்ய தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் தங்கியிருக்கிறார்களா என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close