டெல்லியில் திருடப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீல நிற மாருதி வேகன்-ஆர் காரில் பயணம் செய்வது வழக்கம். கடந்த 12-ஆம் தேதி, டெல்லி தலைமைச் செயலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மாருதி வேகன்-ஆர் மாடல் நீல நிறக் காரை, மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றனர். முதலமைச்சர் காரே திருடு போனதால் காவல்துறையினர் தீவிரமாக, கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியபாத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கார் திருடு போனது தொடர்பாக பேசியிருந்த முதலமைச்சர் கெஜ்ரிவால், "டெல்லியில் முதலமைச்சரின் காருக்கே பாதுகாப்பு இல்லாத போது சாமானியரின் கதி என்ன..?" என கேள்வி எழுப்பியிருந்தார். டெல்லியில் காவல் துறை நிர்வாகம், துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கெஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!