இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோற்றது.
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டிகள் அமீரகத்தில் நடந்து வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதலாவது ஆட்டம் துபாயில் நேற்றிரவு நடந்தது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம் 103 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு 6-வது சதம். சோயிப் மாலிக் 81 ரன்களும் பஹார் ஜமான் 43 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 293 ரன்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடியது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே வந்தது. திரிமன்னேவும் பந்துவீச்சாளர் தனஞ்செயாவும் ஓரளவுக்கு நிலைத்து நின்று முறையே, 53, 50 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் அந்த அணி 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ராயிஸ், ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி சமீபகாலமாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்