Published : 14,Oct 2017 02:07 AM

கடைசி டி20 போட்டி ரத்து: அடுத்து வந்தாச்சு நியூசி.

Hyderabad-T20-called-off--India-Australia-series-tied

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஈரமான மைதானம் காரணமாக கைவிடப்பட்டது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒரு நாள் போட்டி தொடரை 1- 4 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்தது. டி20 போட்டியில் 1-1 என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி, கடைசி போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடக்க இருந்தது. ஆனால் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக மைதானம் ஈரம் நிறைந்து காணப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தை கைவிட இரு அணி கேப்டன்களும் ஒப்புக்கொண்டனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடர் நிறைவடைந்த நிலையில் அடுத்து நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் விளையாடுகிறது. இதற்காக அந்த அணி, நேற்று இந்தியா வந்துள்ளது. இந்த அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் வரும் 22-ம் தேதி நடக்கிறது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்