Published : 13,Oct 2017 11:54 AM
தீபாவளிக்கு 11,645 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையையொட்டி 11,645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான 29 முன்பதிவு கவுன்டர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 11,645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறினார். மேலும் மழைக்காலத்தில் நீர் ஒழுகாத அளவில் பேருந்துகள் தரமான அளவில் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்..