
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூரில் டேன் டீ எனப்படும் அரசு தேயிலை நிறுவன தோட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினக் கூலிகளாக உள்ள இவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டபடவில்லை. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் இன்று சாலை மறியல் போரட்டத்தை நடத்தினர்.