[X] Close

தோனியின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்தவன் நான்.. சச்சின் நெகிழ்ச்சி..!

sachin-tendulkar-wish-to-dhoni

ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக அணிக்குள் நுழைந்து இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனியின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்தவன் நான் என சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள மகேந்திர சிங் தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்‘ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியதற்கு தோனிக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் ஒரு வீரராய் போட்டிகளில் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் சச்சின் கூறியுள்ளார்.


Advertisement

மேலும் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக அணிக்குள் நுழைந்து இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவரது வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார். மகேந்திர சிங் தோனி எடுத்திருக்கும் முடிவு சரியானது தான் என்றும் நாம் அனைவரும் அவர் தலைமையில் கிடைத்த வெற்றிகளை கொண்டாட வேண்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close