Published : 13,Oct 2017 04:36 AM

1 வருடமாக பாலியல் வன்கொடுமை: மேக்கப்மேன் மீது ஹேர் ஸ்டைலிஷ்ட் புகார்

Star-s-Hairstylist-Raped-Repeatedly-For-A-Year

தன்னை மிரட்டி ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஹீரோயின்களின்  மேக்கப்மேன் மீது ஹேர் ஸ்டைலிஷிட் புகார் தெரிவித்துள்ளார்.

மும்பை பிலிம்சிட்டியில், ஹேர் ஸ்டைலிஷ்டாக பணியாற்றி வருபவர் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் ஆகி, மூன்று குழந்தைகள் உள்ளன. இவர் கணவர், ஆட்டோ ஓட்டுநர். குடித்துவிட்டு லதாவை துன்புறுத்துவாராம். இந்நிலையில் டிவி ஷோ ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த லதாவுக்கு பிரபல ஹீரோயின்களின் மேக்கப்மேன் ஒருவர் பழக்கமானார். 

அவர், தனக்கு ஹேர் ஸ்டைலிஷ்ட் தேவைப்படும்போது அழைப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர், ‘படப்பிடிப்பில் இருக்கிறேன். ஹேர்ஸ்டைலிஷ்ட் தேவைப்படுகிறது. கோரேகான் வர முடியுமா?’ என்று லதாவை ஒரு நாள் அழைத்துள்ளார். அதன்படி சென்றார் லதா. அவருக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளார் அவர். குடித்ததும் மயங்கிவிட்டார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படமும் வீடியோவும் எடுத்தாராம் மேக்கப்மேன். மயக்கம் தெளிந்தபோது தான் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த லதா, மேக்கப்மேனிடம் சண்டை போட்டார். 
சத்தம் போட்டாலோ, வெளியில் சொன்னாலோ, தான் எடுத்து வைத்திருக்கும் வீடியோவை வெளியிட்டுவிடுவதாக அவர் மிரட்டினார். இதையடுத்து அப்படி மிரட்டியே ஒரு வருடமாக அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மேக்கப் மேன். இதுபற்றி லதா தனக்கு வேண்டிய சிலரிடம் சொன்னார் லதா. அவர்கள் தைரியம் கொடுத்ததை அடுத்து, டிண்டோஷி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மேக்கப் மேனை தேடி வருகின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்